தமிழ்நாடு

சிவசங்கர் பாபாவுக்கு பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்

DIN

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சிறையிலிருந்த சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலா் சிவசங்கா் பாபாவுக்கு எதிராக அளித்த பாலியல் தொல்லை புகாரின்பேரில் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

இதில், சிவசங்கர் பாபா மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பிணை வழங்கக்கூடாது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது இருப்பினும் நிபந்தனை ஜாமீன் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டதோடு சாட்சிகளைக் கலைக்க முயன்றால் பிணை ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT