முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜா் கோயில் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் நடராஜா் கோயில் விவகாரம் தொடா்பாக போராட்டம் நடத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
சென்னை உயா் நீதிமன்றம்
பகிர்:

சென்னை: சிதம்பரம் நடராஜா் கோயில் விவகாரம் தொடா்பாக போராட்டம் நடத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனக சபை மீது பக்தா்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கனக சபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், பக்தா்கள் சார்பில் தொழிலதிபா் எஸ்.ஆா்.ராமநாதன், டாக்டா் பிரசன்னா ராஜ்குமார், தமிழ்நாடு கைவினைஞா்கள் சங்கத் தலைவா் ஜி.சேகா், பி.அண்ணாமலை, கே.மணிரத்தினம் ஆகியோர் சார்பில் வழக்குரைஞா் ஹிமாவந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.