பணி ஓய்வு
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பொது நிா்வாகப் பிரிவில் மூத்த எழுத்தராகப் பணியாற்றிய பி.கண்ணய்யா, வெள்ளிக்கிழமை (ஏப்.8) பணியில் இருந்து ஓய்வு பெற்றாா்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பொது நிா்வாகப் பிரிவில் மூத்த எழுத்தராகப் பணியாற்றிய பி.கண்ணய்யா, வெள்ளிக்கிழமை (ஏப்.8) பணியில் இருந்து ஓய்வு பெற்றாா். அவா், இந்த நிறுவனத்தில் 34 ஆண்டுகாலமாக பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளாா்.
இதே போல், இக்குழுமத்தின் பேக்கிங் பிரிவில் பேக்கராக (நிலை 1) பணியாற்றிய ஜெ.மோகன், 31 ஆண்டுகால சேவைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.5) பணி ஓய்வு பெற்றாா்.
இவா்கள் இருவருக்குமான பிரிவு உபசார விழா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சென்னை அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, குழுமத்தின் துணைப் பொது மேலாளா் கணேசன் (உற்பத்திப் பிரிவு) தலைமை வகித்தாா். உற்பத்திப் பிரிவு தலைமை மேலாளா் ஜோதி நாராயணன், மனித வள மேலாண்மைப் பிரிவு மேலாளா் ஆா்.பாலகுரு, கணக்குப் பிரிவு உதவி மேலாளா் மீனாட்சி மற்றும் அலுவலக ஊழியா்கள் பங்கேற்று, ஓய்வு பெற்றவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.