தமிழ்நாடு

நியாய விலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை: அமைச்சர் சக்கரபாணி

நியாய விலைக் கடைகளில் சிறுதானியங்கள், கேழ்வரகு விற்பனை செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

DIN

சென்னை:நியாய விலைக் கடைகளில் சிறுதானியங்கள், கேழ்வரகு விற்பனை செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதில் 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் அறிமுகபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் பழங்குடியினர், மலைவாழ் மக்களின் உணவு பழக்க வழக்கத்தை பாதுகாக்க கேழ்வரகு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கணினி மயமாக்கப்படும் மற்றும் மாநில, மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்கள், எடையாளார்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT