தமிழ்நாடு

1,800 ஆண்டு பழமையான நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்கம் பறிமுதல்

DIN

சென்னை: இந்தியாவிலிருந்து கடத்த முயன்ற நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க சிலையை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

நுண்ணறிவு பிரிவினர் அளித்த தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலைய சரக்கு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அமெரிக்காவுக்கு செல்லவிருந்த சரக்குகளை சோதனையிட்டதில், நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க சிலையை கண்டுபிடித்தனர்.

ஏற்றுமதி ஆவணக் குறிப்பில் கும்பகோணத்தில் உள்ள கலை, கைவினைப் பொருள் நிலையத்தில் இதனை வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தொல்பொருள் துறையிடமிருந்து பெற வேண்டிய சான்றிதழ் அளிக்கப்படவில்லை. சிலையை சோதனையிட்டதில் தொன்மை வாய்ந்ததாக தோற்றமளித்தது. 36 சென்டி மீட்டர் உயரமுள்ள இந்த வெண்கல சிலை 4.56 கிலோ எடை கொண்டதாகும். இந்தச் சிலை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை அடுத்த கெடிலம் என்ற ஊரை சேர்ந்தது என்று விசாரணையில் தெரியவந்தது. 

இந்தச் சிலை 1800 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த சிலை என தொல்லியல் துறை சந்தேகிக்கிறது. இதனைத் தொடர்ந்து சிலை மற்றும் இதரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே.ஆர்.உதய் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT