தமிழ்நாடு

தூத்துக்குடிக்கு 4,000 டன் நிலக்கரி வருகை; மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி வந்ததை அடுத்து மின் உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது. 

DIN

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி வந்ததை அடுத்து மின் உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது. 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்த உள்ள 5 யூனிட்டுகளில் ஒன்றில் மட்டும் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 
மற்ற யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 

தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யாததால் தூத்துக்குடி அனல் மின் நிலையம் முடங்கியுள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் இன்று தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி வந்துள்ளது. இதையடுத்து  அனைத்து யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு

சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா கோரி மனு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

சாராயம் கடத்தியவா் கைது

கோயில்களில் நகை, ரொக்கம் திருட்டு

SCROLL FOR NEXT