எம்பி சு. வெங்கடேசன் 
தமிழ்நாடு

மத்திய அரசின் தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள்: சு.வெங்கடேசன் எம்.பி.

தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

DIN

தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

தில்லியில் ஏப்ரல் 8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில்,  “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். பல மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். 

அவரது இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தனது ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 

அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே.

இந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே மத்திய அரசின் தந்திரம்.
 
தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்வில் முன்னேற கடின உழைப்பு தேவை: இந்திய விமானப்படை அதிகாரி

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 351 மனுக்கள் அளிப்பு

தலைநகரில் இடியுடன் கூடிய பலத்த மழை; ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியீடு!

குடியாத்தம் நகர கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது

SCROLL FOR NEXT