முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கரோனா

​தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. 20,287 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, புதிதாக 21 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,53,054 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 29 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா உயிரிழப்புகள் பதிவாகவில்லை.

இன்றைய நிலவரப்படி 229 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.