தமிழ்நாடு

அத்திகுளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி சிறப்பு பிரார்த்தனை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவானி ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவானி ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி அத்திகுளம் சி.எஸ்.ஐபரிசுத்த பவுல் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவாலயத்தில் ஒன்றுகூடி கைகளில் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி ஓசன்னா பாடல்கள் பாடி கிராமத்திலுள்ள முக்கியவீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பவனி சபைகுரு அருள் தனராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவிக்குரு ஜெபராஜ் எபினேசர் மற்றும் சபை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை திரும்பிய விஜய்! | TVK | Karur | CBI

தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் பிக் பாஸ் குழு!

83 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

“VIJAY தேவையான விளக்கத்தை அளித்துள்ளார்! மீண்டும் ஆஜராவார்!” தவெக நிர்மல் குமார்

ராமராஜன் - கனகா சந்திப்பு!

SCROLL FOR NEXT