நீரவ் மோடியின் கூட்டாளியை இந்தியா அழைத்து வந்தது சிபிஐ 
தமிழ்நாடு

நீரவ் மோடியின் கூட்டாளியை இந்தியா அழைத்து வந்தது சிபிஐ

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவிலிருந்து தப்பியோடிய நீரவ் மோடி வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டள்ளது.

ANI


புது தில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவிலிருந்து தப்பியோடிய நீரவ் மோடி வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டள்ளது.

நீரவ் மோடியின் நெருங்கிய கூட்டாளி பாரப் சுபாஷ் ஷங்கரை எகிப்தின் கெய்ரோ நகரிலிருந்து சிபிஐ அதிகாரிகள் இன்று காலை மும்பை அழைத்து வந்தனர்.

சுபாஷ் ஷங்கர் கெய்ரோவில் இருப்பது தெரிய வந்ததையடுத்து, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் அவர் இந்தியா அழைத்து வரப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீரவ் மோடியின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டவர் சுபாஷ் ஷங்கர் என்பதும், அவரது ஒரு நிறுவனத்தில் சுபாஷ் துணைப் பொது மேலாளராகப் பணியாற்றியதும், இந்த விசாரணையில் சுபாஷ் ஷங்கரிடமிருந்து மேலதிகத் தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றார் நீரவ் மோடி. அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் தொடா் முயற்சியால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனுவை பிரிட்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT