தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

DIN

கும்மிடிப்பூண்டி: சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 125 ஆவது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி உள்ள நேமள்ளூரில்  நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்கு திமுக இலக்கிய அணி நிர்வாகி ஜி. மனோகரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிபூண்டி ஒன்றியக் குழுத் தலைவர் மாலதி குணசேகரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன் பங்கேற்றனர்.

தொடர்ந்து விழாவில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மரியாதை செய்யப்பட்டு,பெண்களுக்கு புடவை மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மாநெல்லூரில்  நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் திமுக நிர்வாகிகள் சந்திரமோகன் தேவன்பு வடிவேல் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் திமுக மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி ஜீ.மனோகரன் ஆகியோர் பங்கேற்று அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். 

அவ்வாறு சானா புத்தூரில்  நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

கண்ணன்கோட்டை பகுதியில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவிற்கு அம்பேத்கர் நற்பணி மன்ற நிர்வாகி கோபியை தலைமை தாங்கினார் திரளான பொதுமக்கள் பங்கேற்று அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஒரு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய அதிமுக நிர்வாகி

மாதர்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் அதிமுக நிர்வாகி சரவணன் ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம். எஸ்.சிவகுமார் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். 

அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த ஏன் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் விநாயகம்.

மேலும் ஏன் குப்பத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு ஏன் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் விநாயகம் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தங்கதுரை, சாமுவேல் மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

SCROLL FOR NEXT