தமிழ்நாடு

குரு பெயர்ச்சி விழா: திட்டை கோயிலில் திரண்ட பக்தர்கள்

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே உள்ள திட்டை கோயிலில் குருபெயர்ச்சி விழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர்.

தஞ்சாவூர் - மெலட்டூர் சாலையில் உள்ள இக்கோயிலில் தனி சன்னதியில் குரு பகவான் ராஜ குருவாக எழுந்தருளியுள்ளார். 

திட்டை கோயிலில் குரு பகவானை வழிபடுவதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

குரு பகவான் வியாழக்கிழமை (இன்று) அதிகாலை 4.16 மணிக்கு  கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி குருபகவானுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டது. பின்னர், குரு பகவான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

திட்டை கோயிலில் குரு பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக ஆங்காங்கே தடுப்புக்கட்டைகளும் அமைக்கப்பட்டது.

மேலும் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசியினர் பரிகாரம் செய்து வழிபட்டனர். 

குரு பகவானுக்கு சிறப்பு தீபாராதனை

குரு பெயர்ச்சியையொட்டி ஏப்ரல் 24-ஆம் தேதி லட்சார்ச்சனையும், ஏப்ரல் 29, 30-ஆம் தேதிகளில் பரிகார ஹோமமும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT