சென்னையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி
சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலியாகினர்.
சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலியாகினர்.
சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயில் சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது வீட்டில் ஊழல் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியை அவர் சுத்தம் செய்வதற்காக இறங்கியுள்ளார். அப்போது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரது மகன் பிரவீன்குமார் மற்றும் அருகில் இருந்த பிரமோத், சாரநாத் ஆகியோரும் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினர்.
இதில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.