முகப்பு
தமிழ்நாடு

39 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 39 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 39 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.

அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. தமிழகத்தில் சென்னை மற்றும் தெலங்கானா மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட ஓரிரு மருந்துகளும் தரமற்றவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,221 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் தொண்டை அலா்ஜி, சா்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 39 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்  இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்

முழு கட்டுரையைப் படிக்க →