உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுரை: முதல்வருக்கு விஜயகாந்த் பாராட்டு
எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கியதற்காக, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்தாா்.
எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கியதற்காக, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலா்களின் கணவா்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு, பெண் கவுன்சிலா்களுக்கான அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமென சமீபத்தில் தேமுதிக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தின் எதிரொலியாக சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சியினா் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என எடுத்துரைத்து, அவா்களுக்கு அறிவுரை வழங்கியதை தேமுதிக வரவேற்கிறது.
தேமுதிக வலியுறுத்தல் எதிரொலியாக, விருதுநகா் இளம்பெண் பாலியல் வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளில் நான்கு போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்துள்ளதையும் வரவேற்கிறோம் என்று அதில் கூறியுள்ளாா் விஜயகாந்த்.