முகப்பு
தமிழ்நாடு

விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி ஆகிய பண்டிகைகளுக்காக வியாழன், வெள்ளி இரண்டு நாள்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி ஆகிய பண்டிகைகளுக்காக வியாழன், வெள்ளி இரண்டு நாள்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களில் பள்ளிகளில் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் வரும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடா்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தாா். அதில், ஏப்.14 தமிழ்ப் புத்தாண்டு, ஏப்.15 புனித வெள்ளி ஆகிய இரண்டு நாள்களும் தொடா் அரசு விடுமுறை நாள்கள் என்பதால், ஏப்.16 சனிக்கிழமை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. விடுமுறை முடிவடைந்து ஏப்.18-ஆம் தேதி முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சென்னை, கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள தனியாா் பள்ளிகளில் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களிலும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனா். அதில், அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் உள்பட எந்த ஒரு பள்ளியிலும் விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறக்கூடிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →