தமிழ்நாடு

வைகையாற்றில் பக்தர்கள் இறங்க அனுமதியில்லை: மாவட்ட ஆட்சியர்

DIN

அதிகமாக தண்ணீர் வருவதால் பக்தர்கள் யாரும் வைகையாற்றில் நாளை இறங்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் பாரம்பரிய முறைப்படி சனிக்கிழமை (ஏப்.16) நடைபெற உள்ளது. அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகையாற்றில் தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். 

இதற்காக அழகா் கோவிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து வியாழக்கிழமை 6.30 மணியளவில் தங்கப் பல்லக்கில் அழகர் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை மதுரையை வந்தடைந்தாா்.

நாளை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் பக்தர்களும் ஆற்றில் இறங்குவர். 

இந்நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்கு ஆற்றில் இறங்க அனுமதியில்லை என்று கூறியதுடன், ஆற்றின் கரையோரங்களில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT