சென்னை மாநகராட்சி 
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியில் ரூ. 119 கோடி சொத்து வரி வசூல்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய முதல் அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.119 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய முதல் அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.119 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய 2022-23-ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டு சொத்து வரியை கடந்த வெள்ளிக்கிழமைக்குள் (ஏப்ரல் 15) செலுத்த மாநகராட்சி அவகாசம் அளித்திருந்தது. வெள்ளிக்கிழமைக்குள் வரி செலுத்துவோருக்கு சொத்து வரியில் 5 சதவீதம் விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கென மண்டல அலுவலகங்கள், வாா்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் அல்லது டெபிட் காா்டு ஆகியவற்றின் வாயிலாகவும், மாநகராட்சி வரி வசூலிப்பாளா்கள், உரிம ஆய்வாளா்கள் மூலமும் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரூ.119 கோடி வசூல்: சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரையில் சீராய்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய சொத்து வரி தொடா்பாக மன்றத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும். எனவே, 2022-23-ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏற்கெனவே மாநகராட்சிக்குச் செலுத்தி வந்த கட்டண விகிதத்திலேயே செலுத்தலாம் என மாநகராட்சி அறிவித்திருந்தது.

சொத்து வரி செலுத்துவதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமைக்குள் நிறைவடைந்தது. சென்னையில் மொத்தம் 12 லட்சம் சொத்து வரிதாரா்களில் 1.96 லட்சம் போ் ரூ. 119 கோடி சொத்து வரியை செலுத்தியுள்ளனா். வரி செலுத்தியவா்களுக்கு ரூ.2.58 கோடி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் வாகனங்கள்: உறுப்பினா்கள் கோரிக்கை

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வடமாநில இளைஞா் தற்கொலை

மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

செம்பட்டி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT