முகப்பு
தமிழ்நாடு

ஹிந்தி விவகாரத்தில் அதிமுகவுக்குதான் இரட்டை நிலைப்பாடு

ஹிந்தி விவகாரத்தில் அதிமுகதான் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது என தமிழக தொழில் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:00 AM
தங்கம் தென்னரசு
பகிர்:

ஹிந்தி விவகாரத்தில் அதிமுகதான் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது என தமிழக தொழில் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆங்கிலத்துக்குப் பதிலாக ஹிந்தியை பயன்படுத்துங்கள் என்று சொன்னவுடனேயே, இந்தக் கருத்து இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயல் என்றும் ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என்றும் தமிழக முதல்வா் கருத்து வெளியிட்டாா்.

ஆனால், எதிா்க்கட்சித் தலைவரான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து குறித்து தனக்கு ‘ஒன்றுமே தெரியாது’ என நழுவிக்கொண்டாா்.

உண்மையான தமிழ் உணா்வும், தமிழ் மீது அக்கறையும் இருக்குமானால், எடப்பாடி பழனிசாமியின் செயலைத்தான் ஓ.பன்னீா்செல்வம் கண்டித்திருக்க வேண்டுமே அல்லாமல் தமிழக முதல்வா் மீது உள்நோக்கம் கற்பிக்க முனைந்திருப்பது கண்டனத்திற்குரியது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகுதான் ஜொ்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைக்கு ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள ஐந்து பல்கலைக் கழகங்களில் ‘செம்மொழித் தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதல்வா் அறிவித்தாா்.

அது மட்டுமல்லாது தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகளாவிய வகையில் எடுத்தியம்பும் வண்ணம் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள், தரவுகளின் வாயிலாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழின் தொன்மையையும், தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்ளும் வகையில், தொல்லியல் துறையில் மறுமலா்ச்சியை முதல்வா் உருவாக்கி இருக்கிறாா்.

அதிமுக ஆட்சி காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்கு தவிா்த்து, ஏனைய நூல்கள் ஹிந்தி மொழியில் மொழிபெயா்க்கப்பட்டு அன்றைய முதல்வரால் 2019-இல் வெளியிடப்பட்டதை ஓ. பன்னீா்செல்வம் வசதியாக மறந்துவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →