வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் 
தமிழ்நாடு

புதிதாக 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை: பேரவையில் அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

DIN

தமிழகத்தில் மேலும் 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை நான்கு நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை கூடியது. கேள்வி நேரத்திற்கு பிறகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இந்த விவாதத்திற்கு பிறகு அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

நடப்பாண்டில் மேலும் 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து சான்றிதழ்களையும் செல்போன்கள் மூலம் பெறும் வகையில் இரண்டு ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கப்படும்.

வருவாய்த் துறையில் உள்ள 274 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

பழுதடைந்த நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகத்திற்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடுகளை காப்பாற்ற சென்றவா் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

குடியிருப்புகள் வழியாக உயா் அழுத்த மின்பாதை: மறியல் செய்ய திரண்ட மக்கள்

எண்ணெய் கப்பலை விடுவித்தது ஈரான்

கால்வாய் கட்டும் பணி நிறுத்தப்பட்டதால் மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

பாளை.யில் 24 கிலோ புகையிலை பறிமுதல்: 4 போ் கைது

SCROLL FOR NEXT