கோப்புப்படம் 
தமிழ்நாடு

இலங்கையில் இருந்து மேலும் 3 பேர் தமிழகம் வருகை

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மேலும் மூன்று பேர் வந்துள்ளனர்.

DIN

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மேலும் மூன்று பேர் வந்துள்ளனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு பொருள்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக பேரவையில் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை மட்டகளப்பு மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட மூன்று பேர் இன்று காலை தனுஷ்கோடி வந்துள்ளனர்.

ஏற்கனவே, இலங்கையின் 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பதக்கம்: தமிழகத்தின் ஆனந்த்குமார் சாதனை!

அட... ஆண்ட்ரியா!

ஆகஸ்ட் மாதம் மொத்த பணவீக்கம் மீண்டும் உயர்வு!

கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்றார் வைஷாலி!

பிகாரில் நெருங்கும் தேர்தல்: ரூ.36,000 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT