தமிழ்நாடு

முகக்கவசம் கட்டாயம்; அபராதத்திற்கு மட்டுமே விலக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்தான், அதற்கான அபராதத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மீண்டும் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:

“முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறை திரும்பப் பெறப்படவில்லை. முகக்கவத்திற்கான அபராதத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயம்தான்.

மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் குழுவினர், அருகில் அரசு மருத்துவமனை இருந்தும் வேண்டுமென்றே தனியார் மருத்துவமனையில் அனுமதித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT