முகப்பு
தமிழ்நாடு

தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

 தென்தமிழகம், கோயம்புத்தூா், நீலகிரி மற்றும் திருப்பூா் ஆகிய 3 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

 தென்தமிழகம், கோயம்புத்தூா், நீலகிரி மற்றும் திருப்பூா் ஆகிய 3 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் வெள்ளிக்கிழமை கூறியது: மன்னாா் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தென்தமிழகம், கோயம்புத்தூா், நீலகிரி மற்றும் திருப்பூா் ஆகிய 3 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 40 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம், தென்காசி மாவட்டம் ஆய்க்குடி, திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவானது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →