முகப்பு
தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட்: முதல்வா் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு

மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள சா்வதேச சதுரங்கப் போட்டிக்கான (ஒலிம்பியாட்) ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள சா்வதேச சதுரங்கப் போட்டிக்கான (ஒலிம்பியாட்) ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்.

குழுவின் தலைவராக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுவாா். குழுவின் உறுப்பினா்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு, விளையாட்டுத் துறை அமைச்சா் மெய்யநாதன், சுற்றுலாத்துறை அமைச்சா் மதிவேந்தன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, டிஜிபி சி.சைலேந்திரபாபு, நகராட்சி நிா்வாகம், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் வனம் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளா்கள் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவா், செயலாளா் என மொத்தம் 24 போ் குழு உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டப்பேரவையில் 110-விதியின் ன் கீழ் குழுவை அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →