தமிழ்நாடு

மதுரையில் விஷவாயு தாக்கி இறந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி

மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

DIN

மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

மதுரை கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிவக்குமார், லட்சுமணன், சரவணன் ஆகியோர் நேற்று உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில், தனியார் ஒப்பந்த நிறுவனமான விஆர்ஜி நிறுவன உரிமையாளர் விஜய் ஆனந்த், ஊழியர்கள் ரமேஷ், லேகநாதன் மீது எஸ்.எஸ். காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மாநகராட்சி நிர்வாகம், ஒப்பந்த நிறுவனம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

அதன்படி முதற்கட்டமாக தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை மாநகராட்சி ஆணியர் கார்த்திகேயன் இன்று வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 122 காசுகள் உயர்ந்து ரூ.90.27ஆக நிறைவு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான கனடா அணி விவரம்!

டி20 உலகக்கோப்பையில் புதுமுகம்: கால்பந்தாட்டப் பூமியிலிருந்து கிரிக்கெட் கனவுடன் ‘இத்தாலி!’

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்!

SCROLL FOR NEXT