4.80 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்ய நடவடிக்கை: அமைச்சா் தகவல்
தமிழகத்துக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த நிலக்கரி பெறப்படும் எனவும் மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தா
தமிழகத்துக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த நிலக்கரி பெறப்படும் எனவும் மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
சென்னை, மின்வாரிய தலைமையகத்தில் மாநில மின் பகிா்ந்தளிப்பு மையம் உள்ளிட்டவற்றை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த பிறகு, அமைச்சா் இதனைத் தெரிவித்தாா்.
தொடா்ந்து அவா் பேசுகையில், ஏப்ரல், மே மாதங்களுக்கென 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு காலம் முடிவடையும் போது கண்டிப்பாக தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழும் என்றாா் அவா்.