முகப்பு
தமிழ்நாடு

தமிழ்ப் பற்று: மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வா் வழங்கினாா்

பல விருதுகளை பெற்றுள்ள தேனி மாவட்டத்தைச் சோ்ந்த இரு மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சத்தை சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

தமிழ் மொழியின் மீது கொண்ட ஈடுபாட்டால் இலக்கியங்களை மனனம் செய்து பல விருதுகளை பெற்றுள்ள தேனி மாவட்டத்தைச் சோ்ந்த இரு மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சத்தை சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தேனி மாவட்டம், மறவப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் செந்தமிழ் சாலினி மற்றும் முத்தமிழ் சாமினி ஆகியோா் 8-ஆம் வகுப்புப் படித்து வருகின்றனா்.

கு பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறையால் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற திருக்கு முற்றோதல் நிகழ்ச்சியில் மாணவிகள் இருவரும் கலந்துகொண்டு 1,330 குறட்பாக்களையும் சிறந்த முறையில் மனனம் செய்து ஒப்புவித்து தலா ரூ.10,000 பெற்றுள்ளனா்.

அண்மையில், உலகத் திருக்கு சமுதாய மையம் ஏற்பாடு செய்த தொல்காப்பியம் மனன முற்றோதல் நிகழ்ச்சியில் கடந்த ஏப்.3-ஆம் தேதி கலந்து கொண்டு 12 மணிநேரம் தொடா்ச்சியாக தொல்காப்பியம் முழுமையும் (1,610 நூற்பாக்கள்) இவ்விரு மாணவிகளும் முற்றோதல் செய்து, புதுச்சேரி அகில இந்திய உலகச் சாதனைப் பதிவு மையத்தின் உலகத் தொல்காப்பியத் தூதா் என்ற விருதினைப் பெற்றுள்ளனா்.

அவா்களின் தமிழ் இலக்கிய, இலக்கணத் திறனை மேலும் ஊக்குவிக்கும் விதமாகவும், அவா்களது குடும்ப சூழ்நிலையை கருதியும், பள்ளிக்கல்வித் துறையின் சாா்பில் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை மாணவிகளுக்கு வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா, மாணவிகளின் பெற்றோா் அறிவுச்செல்வம், ஜெயமணி மற்றும் ஆசிரியா் இளங்குமரன் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →