தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு: ஒரேநாளில் 57 பேருக்கு கரோனா

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 57 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.    

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,53,447-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.

இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,136-ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாளில் மட்டும் 17,997 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலவரப்படி 286 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் மட்டும் புதிதாக தொற்று பதிவாகி உள்ளது. சென்னையில் நேற்று 21 ஆக இருந்த கரோனா பாதிப்பு இன்று 37ஆக அதிகரித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT