தமிழ்நாடு

ராமஜெயம் கொலை வழக்கு: துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு

DIN

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலக்க சரியான தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் தகவல் அளித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நடைப்பயிற்சிக்கு சென்ற ராமஜெயத்தை கடத்தி கொலை செய்தனர். இக்கொலை வழக்கு தொடர்பாக தற்போது சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.ஜெயக்குமார் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 198 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் காவல் ஆய்வாளர், உதவி ஆணையர் உள்ளிட்ட 6 பேர் அடங்குவர். மேலும் அமைச்சர் கே.என்.நேருவிடம் இரண்டு முறை நேரில் சென்றும், ராமஜெயத்தின் மகன் வினித், உறவினர் வினோத் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் எனவும் இந்த வழக்கு தொடர்பாக தொடர் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக தகவல்களை தருபவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படும்.

ராமஜெயம் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள், வியாபாரிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தி உள்ளோம். திருச்சி மட்டுமல்லாமல் சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் முக்கிய குற்றவாளிகளிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 100 சதவீதம் விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

சிறப்பு புலனாய்வு பிரிவு ரூ.50 லட்சம் பரிசு  தரப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் கூறிய நிலையில் தற்போது  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராமஜெயம் வழக்கு தொடர்பான தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

9080616241, 9498120467, 70904012599 என்ற வாட்ஸ்ஆப் எண்களில் தகவல் அளிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

திருப்பம் தரும் தினப்பலன்!

SCROLL FOR NEXT