மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சிகள். 
தமிழ்நாடு

புதுச்சேரியில் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சிகள் போராட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

DIN


புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலின்போது புதுச்சேரி மாநிலத்திற்கு அறிவித்த மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, கூடுதல் நிதி உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாத மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், மத்திய அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  அமித்ஷாவே திரும்பிப் போ என்ற கோஷத்துடன் புதுச்சேரி சாரம் திடலில் பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி, மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மூ.சலிம், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், விசிகே முதன்மைச் செயலாளர் தேவ. பொழிலன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT