தமிழ்நாடு

தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழி வகுக்கும் சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

DIN

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழி வகுக்கும் சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

இதையடுத்து, துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதங்களுக்கப் பின் நிறைவேற்றப்பட்டது. இதனை அவைத்தலைவர் அறிவித்தார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசின் ஆணையின் மூலம் தேர்வு செய்யும் வகையில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கொண்ட வந்த இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் உள்ளது போல் தமிழகத்திலும், மாநில அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமித்துக் கொள்ள வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுவது மக்கள் விரோதப் போக்கையே காட்டுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநில அரசே நியமிக்கவேண்டும். மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி உள்ளது. 

துணைவேந்தர் நியமன சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். துணைவேந்தர் நியமன மசோதா மீது பேரவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது அதிமுக உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். விவாதத்தின் நிறைவாக, சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

SCROLL FOR NEXT