தமிழ்நாட்டில் புதிதாக 72 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 16,670 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 72 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,53,679 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | ஏப். 28-ல் அசாம் செல்கிறார் பிரதமர் மோடி
மேலும் 30 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் பதிவாகவில்லை.
இதுவரை மொத்தம் 34,15,250 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி தனிமையில் உள்ளவர்கள் உள்பட மொத்தம் 404 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.