தமிழ்நாடு

பேரவையில் அமர்ந்து அதிமுகவினர் தர்னா: வெளியேற்ற உத்தரவு

DIN

தஞ்சாவூர் விவகாரம் குறித்து பேச அனுமதிக்குமாறு பேரவையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு புதன்கிழமை உத்தரவிட்டார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில்  11 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திருவிழா காலங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் இதுபோன்ற துயர சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து மீண்டும் அவைக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள் தஞ்சாவூர் விவகாரம் குறித்து பேச அனுமதி கோரினர். வெளிநடப்பு செய்த பிறகு மீண்டும் உள்ளே வந்து அனுமதி கோரியதால் அப்பாவு மறுத்தார்.

தொடர்ந்து, பேரவைக்குள் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, அதிமுகவினரை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு அப்பாவு உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT