தமிழ்நாடு

கடலூர்: புளியந்தோப்பு முத்துமாரியம்மன் கோயிலில் தீ 

DIN


கடலூர் மாவட்டம், சி.என்.பாளையம் ஊராட்சி பேருந்து  நிறுத்தம் அருகே உள்ள புளியந்தோப்பில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

கடலூர் மாவட்டம், சி.என்.பாளையம் ஊராட்சி பேருந்து  நிறுத்தம் அருகே உள்ள புளியந்தோப்பில் முத்துமாரியம்மன் கோயில் கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோயில் புதன்கிழமை காலை சுமார் 8 மணி அளவில் தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்தவர்கள் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

இதையடுத்து சிறப்பு நிலைய அலுவலர் ஆர்.ரங்கராமானுஜம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கோயில் முழுமையாக எரிந்து சாம்பலானது. நடுவீரப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT