தமிழ்நாடு

கஞ்சா வேட்டை: 3,562 கிலோ கஞ்சா பறிமுதல்; 2,000-க்கும் மேற்பட்டோர் கைது

DIN



கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மார்ச் 28ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடந்து வருகிறது.

கடந்த 31 நாள்களில் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா, 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 44.9 டன் குட்கா மற்றும் 113 வானங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சிறப்பு நடவடிக்கையில் பல கஞ்சா மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளும், சொத்துகளும் முடக்கப்பட்டன.

தமிழகத்தில் போதைப் பொருள்களை கடத்துவோர், பதுக்குவோர் விற்போர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்டாங்கி சேலையில் லாஸ்லியா!

சூரிய அஸ்தமனம் காணும் நிலவு!

9-வது வீரராக எம்.எஸ்.தோனி களமிறங்க காரணம் என்ன? பயிற்சியாளர் பதில்!

யாரைத் தேடுகின்றன கண்கள்?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: தலைவர்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT