உலிபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள். 
தமிழ்நாடு

தம்மம்பட்டி அருகே உலிபுரம் ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்பு!

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் வெள்ளிக்கிழமை காலை (ஏப். 29) தொடங்கிய ஜல்லிக்கட்டு விழாவில் 700 காளைகள் பங்கேற்றன.

DIN


தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் வெள்ளிக்கிழமை காலை (ஏப். 29) தொடங்கிய ஜல்லிக்கட்டு விழாவில் 700 காளைகள் பங்கேற்றன.

உலிபுரத்தில் பாம்பலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இன்று வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. விழாவை, ஆத்தூர் கோட்டாட்சியா் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

உலிபுரம் ஜல்லிக்கட்டு

இதில், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட 700 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க, பதிவு செய்த 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக, கோட்டாட்சியா் சரண்யா தலைமையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். விழாவையொட்டி எஸ்.பி. கென்னடி தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்கள், ஊர்க்காவல்படையினர் என 200 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச வீட்டு மனை இடத்தை வகை மாற்றம் செய்யக் கோரி மனு

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை கண்காணிக்க 196 மேற்பாா்வையாளா்கள் நியமனம்

மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள் தொடக்கம்

சொத்து பிரச்னை: ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக ராணுவ வீரா் புகாா்

பழனி சண்முகநதியில் 10 டன் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT