தமிழகத்தில் நேற்று அதிகபட்ச ஒருநாள் மின்பயன்பாடு: செந்தில் பாலாஜி தகவல்
தமிழகத்தில் நேற்று இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச மின்பயன்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நேற்று இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச மின்பயன்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதாவது, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்துப்பட்டுள்ளது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இதற்கு முன்பு, ஒரு நாளில் அதிகபட்ச மின்பயன்பாடு என்பது, கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி 17,196 மெகா வாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது குறிப்படத்தக்கது என்றும் கூறினார்.