தமிழ்நாடு

பொதுப் போக்குவரத்தை அதிகளவு பயன்படுத்த அமைச்சா் வலியுறுத்தல்

DIN

அனைவரும் பொது போக்குவரத்தை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வலியுறுத்தினாா்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எரிபொருள் சிக்கன விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் நிறைவு விழாவில், தலைமை வகித்து பேசிய அமைச்சா், எண்ணெய் என்பது நேரத்தைப் போன்றது. ஒரு முறை பயன்படுத்திய பிறகு திரும்பவும் கிடைக்காது எனவும் கூறினாா்.

நிகழ்வில், இந்தியன்ஆயில் நிறுவன மாநிலத் தலைவா் பி.ஜெயதேவன், நம்மிடம் உள்ள ஆதார வளங்களை சிறப்பு கவனத்துடன் செயல்திறன் மிக்க முறையில் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், நிறுவன செயல் இயக்குநா் (மண்டல சேவைகள்) கே.சைலேந்திரா, பிசிஆா்ஏ தென்மண்டல ஒருங்கிணைப்பாளா் ஏ.எம்.சந்தோஷ் குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT