முகப்பு
தமிழ்நாடு

வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. 

தமிழ்நாடு

வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
பகிர்:

பொன்னேரி:  வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. 

பொன்னேரி வட்டம், வட்டத்தில் உள்ள வல்லூரியில் தேசிய எரிசக்தி துறை-தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவை இணைந்து அமைத்துள்ள அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டில் தலா 500 வீதம் மொத்தம் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி முதல் யூனிட்டின் 3 ஆவது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.  இதனால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டு வந்தனர். மற்ற யூனிட்டுகளில் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அனல்மின் நிலையங்களில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு 500 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →