தமிழ்நாடு

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படம் எடுக்கத் தடை

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படம், விளம்பர, திருமண போட்டோ சூட் எடுக்க நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

DIN

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படம், விளம்பர, திருமண போட்டோ சூட் எடுக்க நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அனுமதியின்றி போட்டோ சூட் எடுக்கப்பட்டதால் தொல்லியல்துறை நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புக்கு 2011ஆம் ஆண்டு முதல் தடை உள்ள நிலையில் தற்போது குறும்படங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

மதுரையிலுள்ள திருமலைநாயக்கர் மகால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புராதனச் சின்னமாகும். மதுரை வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலுக்கு அடுத்தபடியாக திருமலைநாயக்கர் மகாலையே அதிகம் பார்வையிடுகின்றனர்.  

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மகாலில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டை முன்னிட்டு ஒலி-ஒளிக் காட்சி அமைக்கப்பட்டது. தினமும் இரவு இரு காட்சிகளாக நடைபெறும் ஒலி-ஒளிக் காட்சியின் மூலம் மதுரை வரலாற்றை தமிழ், ஆங்கிலத்தில் பார்வையாளர்களுக்கு விளக்குகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT