அரக்கோணம்: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் நாகர்கோவில், நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர்.
அடுத்த இரு தினங்களில் கேரள மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் நாகர்கோவில், உதகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் அந்தந்த மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் தேசிய பேரிடர் மீட்புப்படைக்கு கோரிக்கை விடுத்தனர்.
இத்தகவல் பெறப்பட்டதை அடுத்து கேரள மாநிலம் ஷினி எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம், மலப்புரம் மாவட்டங்களுக்கு தலா ஓரு குழுவினரும் தமிழ்நாட்டில் நாகர்கோவில் மற்றும் உதகை மாவட்டங்களுக்கு தலா இரு குழுக்களும் திங்கள்கிழமை புறப்பட்டனர்.
ஏற்கனவே கேரள மாநிலம் கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி, திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களில் தலா ஓரு குழுவினர் உள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் அரக்கோணம் தளத்தில் 24 மணிநேர கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இத்தகவல் படையின் செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.