சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் அமையவிருக்கும் இடம் குறித்து மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே. சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்த இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு விமான நிலையம் அமைக்க உகந்த இடங்களாக தேர்வு செய்தது.
இந்நிலையில், விமான நிலையம் அமையவிருக்கும் இடம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு, பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் வி.கே.சிங் பதிலளித்துள்ளார்.
கடந்த வாரம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.