சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் வீடு உள்ளிட்ட அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவருக்குச் சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம், அவரது வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்பு, விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்பட விவகாரத்தில், ஏற்கனவே 2020ஆம் ஆண்டு அன்புச் செழியன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்புச்செழியன் வீடு உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் மதுரையில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.