முகப்பு
தமிழ்நாடு

மதுரையில் அன்புச்செழியனுக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை

மதுரையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தி வருகிறார்கள்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
மதுரையில் அன்புச்செழியனுக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
பகிர்:

மதுரை: மதுரையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தி வருகிறார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமாக மதுரையில் உள்ள  தெப்பக்குளம் வீடு,  தெற்குமாசி வீதி அலுவலகம், செல்லூர் திரையரங்கம், கீரத்துறை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள கோபுரம் ரெசிடென்சி, நேதாஜி சாலையில் உள்ள கோபுரம் பைனான்ஸ் அலுவலகம், தம்பி அழகர் சாமி இல்லம், உறவினர் இல்லம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 2020ல் விஜய் நடிப்பில் வெளியாகி பிகில் படத்தின் போது வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இன்று காலை 6 மணி முதல் மதுரையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான 20 இடஙகளில்  இந்த வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சென்னையிலும் அன்புச்செழியனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், மதுரையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →