ஆயுதப்படை காவலர் தற்கொலை 
தமிழ்நாடு

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆயுதப்படை காவலர் தற்கொலை

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியிலிருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

DIN

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியிலிருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தற்கொலைக்கு காரணம் குடும்பப் பிரச்னையா, பணிச் சுமையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

உயிரிழந்த காவலரின் உடலை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்து உள்ளனர். ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மூச்சுத்திணறல்: பிரசவித்த பெண் உயிரிழப்பு

ஏற்றத்தாழ்வு எண்ணம் இல்லாத பெருந்தலைவா் பெரியாா் ஈவெரா: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

வாக்குச் சாவடிகளை பிரிப்பது குறித்து ஆலோசனை

SCROLL FOR NEXT