தமிழ்நாடு

முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள்: குடியரசுத் தலைவர், ஆளுநர் வாழ்த்து

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்தார்.

DIN



புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின் 72 ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நகர் முழுவதும் தொண்டர்கள் பதாகைகள் வைத்தும், கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தும், அன்னதானம் வழங்கியும் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் சார்பில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். ரங்கசாமி பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

முதல்வர் ரங்கசாமிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ட்விட்டர் மூலமும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள் ஏ. நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனீ ஜெயகுமார், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா தலைமையிலான திமுக எம்எல்ஏக்கள், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவ சாதனங்கள் மருந்தகத்துறை, உற்பத்தியில் முதலீடு: இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை அமைச்சா் அழைப்பு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

பெண்களிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு: கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா் கைது

மகளை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய், ஆண் நண்பா் கைது

மின் விளக்கு எரியாததை கண்டித்து தீப்பந்தங்களுடன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஊா்வலம்

SCROLL FOR NEXT