முகப்பு
தமிழ்நாடு

அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு

சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு செய்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு செய்தார்.

தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் தொலைபேசி மூலம் குறைகளை கேட்டறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.