வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் துறைமுகம் அமைக்கும் பணிக்காக 25 லாரிகளில் ஏற்றி வந்த ராட்சத குழாய்களால் மக்களிடையே வியாழக்கிழமை இரவு முதல் பரபரப்பு நிலவியது.
வேதாரண்யம், ஆற்காட்டுத்துறையில் ரூ.150 கோடியில் துறைமுகம் கட்டும் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக 25 லாரிகளில் குழாய்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் லாரிகள் வந்துள்ளதால் பகல் நேரத்தில் குழாய்களை இறக்குவதற்கு ஏதுவாக நகரப் பகுதிக்கு முன்பாக ஆதனூர் கிராமத்தின் பிரதான சாலையோரங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை நிறுத்தம்: எம்எல்ஏ கண்டனம்
இதனிடையே இந்த குழாய்கள் ஹட்ரோ கார்பன் அல்லது ஓஎன்ஜிசி திட்டப் பணிகளுக்கு வந்துள்ளதாக சந்தேகம் உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியது.
இதையடுத்து, இதுகுறித்து விசாரித்த தனிப் பிரிவு போலீசார், இவை துறைமுகம் பணிக்கு வந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.