முகப்பு
தமிழ்நாடு

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜகதீப் தன்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து 

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜகதீப் தன்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:00 AM
பகிர்:

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜகதீப் தன்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாட்டின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. எம்.பி.க்கள் வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர். தொடர்ந்து இன்று மாலை வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. 

அதில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நாட்டின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்தியக் குடியரசின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜகதீப் தன்கருக்கு எனது வாழ்த்துகள், தங்கள் பதவிக்காலத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகள் காக்கப்படுவதுடன், மாநிலங்களவையில் ஜனநாயக விவாதங்கள் வலுப்பெறும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →