தமிழ்நாடு

கொடநாடு வழக்கில் இன்று ஆஜராகிறார் மருது அழகுராஜ்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜிடம் காவல்துறையினர் இன்று விசாரணை நடத்துகின்றனர்.  

DIN

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜிடம் காவல்துறையினர் இன்று விசாரணை நடத்துகின்றனர்.  

கோத்தகிரி அருகேயுள்ள, கொடநாடு எஸ்டேட்டில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில், எஸ்டேட்டின் காவலாளியான ஓம் பகதூா் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமாா், ஜிதின் ஜாய், ஜம்சீா் அலி, மனோஜ் சாமி, குட்டி (எ) பிஜின் ஆகியோரை கோத்தகிரி போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய காா் ஓட்டுநா் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பாா்வையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 267 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜிடம் இன்று தனிப்படையினர் விசாரணை நடத்தவுள்ளனர். 

'கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று, இன்று காலை கோவையில் விசாரணைக்கு ஆஜராகிறேன்' என்று மருது அழகுராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல் வந்த நிலையில், நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பதவியிலிருந்து மருது அழகுராஜ் விலகியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT